தொடர்புகளுக்கு :- paduvaanwinnews@gmail.com
Home » » மாவடி வேம்பு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

மாவடி வேம்பு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

Penulis : sankar on Sunday, June 10, 2018 | June 10, 2018

மட்டக்களப்பு, மாவடி வேம்பு பகுதியில் நேற்றைய தினம் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சின்னத்தம்பி என்றழைக்கப்படும் சந்திரமோகன் கிருபைராசா என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நுண்கடன் தொல்லையின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுண்கடன் வழங்கும் மூன்று நிறுவனங்களில் ஒரே காலத்தில் கடனைப்பெற்று தவணைப்பணத்தைச் செலுத்த முடியாத நிலையில் மற்றுமொரு நுண்கடன் நிறுவனத்தில் ஐந்து இலட்சம் ரூபா கடனைப்பெற்றுக்கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததன் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது தாயின் வீட்டு முற்றத்தின் கூரையில் புடவை ஒன்றின் மூலம் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பணம் பெற்றுவருவதாகக்கூறி மனைவியின் வீட்டிலிருந்து தாயின் வீட்டிற்கு வந்த இவர் அங்கேயே இரவு தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில், அதிகாலைவேளையில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் மற்றும் மட்டக்களப்பு தடயவியல் பொலிஸ் பிரிவினர் ஆகியோர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஐந்து மாத காலப்பகுதிக்குள் 75இற்கும் மேற்பட்ட தற்கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக திடீர் மரண விசாரணையதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்துள்ளார்.
நுண்கடன் தொல்லையினாலேயே அதிக தற்கொலைகள் இடம்பெற்றுள்ளதனால் பொதுமக்களை விழிப்புணர்வு மற்றும் வாழ்வாதார வேலைத்திட்டங்களை குறிப்பாக தமிழ் அரசியல் தலைமைகளின் ஊடாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

Post a Comment

 
Copyright © 2018. paduvaanwin . All Rights Reserved.
Design Template by paduvaanwin.com |