தொடர்புகளுக்கு :- paduvaanwinnews@gmail.com
Home » » சற்றுமுன் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

சற்றுமுன் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

Penulis : sankar on Sunday, June 10, 2018 | June 10, 2018

முல்லைத்தீவு, விசுவமடு 12ஆம் கட்டைப்பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட இருவரை இன்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தரவிற்கு அமைய குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபர்கள் சட்டவிரோத மதுபான பைக்கற்று ஒன்றை 100 ரூபாவிற்கு விற்பனை செய்துகொண்டிருந்த நிலையில் அவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்கள் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Share this article :

Post a Comment

 
Copyright © 2018. paduvaanwin . All Rights Reserved.
Design Template by paduvaanwin.com |