தொடர்புகளுக்கு :- paduvaanwinnews@gmail.com
Home » » கொக்கட்டிச்சோலை பகுதியில் தலைமறைவாகிய சந்தேகநபர்கள் துப்பாக்கியுடன் மூவர் கைது!

கொக்கட்டிச்சோலை பகுதியில் தலைமறைவாகிய சந்தேகநபர்கள் துப்பாக்கியுடன் மூவர் கைது!

Penulis : sankar on Sunday, June 10, 2018 | June 10, 2018

மட்டக்களப்பு - காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கொக்கட்டிச்சோலை பகுதியில் தலைமறைவாகியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற காத்தான்குடி பொலிஸார் சந்தேகநபர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.
புதிய காத்தான்குடி 5, கர்பலா வீதி, அலியார் சந்தியில் கடந்த வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கி சூட்டினை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் முதியவரொருவர் பலியாகியிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்திய மோட்டார்சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Share this article :

Post a Comment

 
Copyright © 2018. paduvaanwin . All Rights Reserved.
Design Template by paduvaanwin.com |