தொடர்புகளுக்கு :- paduvaanwinnews@gmail.com
Home » » பிரபாகரனையும் விஜேவீரவையும் வன்முறை பாதைக்கு தள்ளியது யார்?

பிரபாகரனையும் விஜேவீரவையும் வன்முறை பாதைக்கு தள்ளியது யார்?

Penulis : sankar on Sunday, June 10, 2018 | June 10, 2018

வன்முறையாளர்கள் அல்ல எனக் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகளே பிரபாகரனையும் விஜேவீரவையும் வன்முறை பாதைக்கு தள்ளியதாக பிரஜைகள் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காமினி வியங்கொட தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக 30 வருடகால போரை எதிர்கொள்ள நேரிட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
சுதந்திரத்திற்கு பின்னர் தமது மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள தமிழ் தலைவர்கள் தொடர்ந்தும் முயற்சித்தனர்.
சிங்கள தலைவர்கள் பல தடவைகள் அவர்களை ஏமாற்றியதன் காரணமாகவே அது தோல்வியடைந்தது.
நாட்டில் ஆட்சிக்கு வந்த இரண்டு பிரதான கட்சிகளும் தமிழ் தலைவர்களை ஏமாற்றின. தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுவதன் மூலம் ஏற்படக் கூடிய பிரதிபலன்கள் தொடர்பாக புரிந்துக்கொள்ளும் அளவுக்கு சிங்கள தலைவர்களுக்கு தூரநோக்கம் கொண்ட சிந்தனை இருக்கவில்லை எனவும் காமினி வியங்கொட குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

Post a Comment

 
Copyright © 2018. paduvaanwin . All Rights Reserved.
Design Template by paduvaanwin.com |