தொடர்புகளுக்கு :- paduvaanwinnews@gmail.com
Home » » முஷ்லிம் விவகார அமைச்சராக ஒரு இந்து தமிழரை நியமிக்க முடியுமா? பா.அரியநேத்திரன்

முஷ்லிம் விவகார அமைச்சராக ஒரு இந்து தமிழரை நியமிக்க முடியுமா? பா.அரியநேத்திரன்

Penulis : sankar on Wednesday, June 13, 2018 | June 13, 2018

இந்து சமய விவகார பிரதி அமைச்சராக காதர் மஷ்தானை நியமித்த ஐனாதிபதி மைத்திரி பால சிறிசேனா பௌத்த மத விவகார அமைச்சராக ஒரு இஷ்லாமியரை நியமிப்பாரா அல்லது முஷ்லிம் விவகார அமைச்சராக ஒரு இந்து தமிழரை நியமிக்க முடியுமா என கேழ்வி எழுப்பினார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் காதர் மஷ்த்தானுக்கு இந்து சமய பிரதி அமைச்சராக இன்று 12/06/2018, ஜனாதிபதி நியமித்தது தொடர்பாக ஊடகவியலாளர் கருத்து கேட்டபோது மேலும் தெரிவிக்கையில்.

இந்து மக்களை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா அவமானப்படுத்தி யுள்ளார் இந்துசமய விவகாரம் என்பது அந்த சமய பாரம்பரிய கலாசார நடைமுறைகளை அறிந்த ஒருவரே நியமிக்க வேண்டும். கடந்த காலம் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த செல்லையா இராசதுரை இந்துகலாசார அமைச்சராக இருந்த போது பிரதி இந்து கலாசார அமைச்சராக பௌத்த மதத்தை சேர்ந்த புஷ்சிநிலமே என்பவர் நியமிக்கப்பட்டார் அதன்பின் வதுளை மாவட்டத்தை சேர்ந்த இன்னுமொரு பௌத்தர் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட வரலாறு உள்ளது ஆனால் பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் இந்து கலாசார பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டாலும்

பௌத்த மதத்திற்கும் இந்து மதத்திற்கும் இடையில் சில விடயங்களில் உடன்பாடும் இந்து கடவுளை பௌத்தர்கள் வணங்கும் சம்பிரதாயமும் உண்டு ஆனால் செல்லையா இராசதுரை இந்துசமய அமைச்சராக இருந்து அதன்பின் டக்லஷ் தேவானந்தா,மகேஷ்வரன் ஆகியோர் இந்து விவகார அமைச்சராக இருந்த போது எவரும் பிரதி அமைச்சராக நியமிக்கப்படவில்லை

ஆனால் தற்போது நல்லாட்சி என தம்மை தாமே புகழாரம் கூறும் இந்த அரசின் ஜனாதிபதி அவர்கள் ஒரு இஷ்லாம் மதத்தை சேர்ந்த ஒருவரை இந்து விவகார பிரதி அமைச்சராக நியமித்திருக்கும் செயல் முற்றிலும் சிலைவணக்கத்தை எதிர்க்கும் இஷ்லாம் மதத்தை கடைப்பிடிக்கும் ஒருவர் எப்படி இந்து கடவுளை மதிக்கும் மனப்பாங்கு அவருக்கு ஏற்படும்.

தனிப்பட்ட முறையில் காதர் மஷத்தான் என்ற தனி மனிதனை நாம் எதிர்க்கவில்லை ஆனால் அவர் ஒரு இஷ்லாம் மதம் சார்ந்த ஒருவரை இந்து விவகாரத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை ஏன் ஜனாதிபதி நியமித்தார் இதன் மூலமாக உலகத்தில் உள்ள சகல இந்து மக்களின் முகத்தில் கரிபூசிவிட்டார்.

இந்து ஆலயங்களில் வழங்கப்படும் சிவசின்னங்களான விபூதி சந்தணம் குங்குமம் போன்ற மங்கலப்பொருட்களை ஒரு இஷ்லாம் மதத்தைபின்பற்றும் காதர் மஷ்த்தான் அணிவாரா?

இந்து ஆலயங்களில் நடைபெறும் பாரம்பரிய பூசை அனுஷ்டானங்கள் மகோற்சவம் போன்ற நிகழ்வுகளில் மேலாடை இன்றி இவர் கலந்து கொள்ளமுடியுமா? இந்துமத அடிப்படை விடயங்களை மனதார மதிக்கும் மன நிலை இல்லாதவர்களை ஏன் ஜனாதிபதி நியமித்தார் என்ற சந்தேகம் உள்ளது.

கட்டாயம் ஒரு பிரதி அமைச்சர் இந்துசமய விவாகரத்துக்கு நியமிக்க வேண்டுமானால் ஒரு தமிழரை அல்லது சிங்கள பௌத்தரை நியமித்திருக்கலாம்.இது ஒட்டுமொத்த தமிழ்மக்களையும் அவமதிக்கும் ஒரு செயலாகவே நாம் பார்கின்றோம்.

உடனடியாக இஷ்லாம் மதம் சார்ந்த காதர் மஷ்த்தானுக்கு வழங்கப்பட்ட இந்து விவகார பிரதி அமைச்சர் பதவியை மீளப்பெற ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 அப்படி அந்த அமைச்சர் பதவி தொடர்ந்தும் காதர் மஷ்த்தான் என்ற இஷ்லாம் மதத்தை சேர்ந்தவர் பதவியில் இருந்தால் அது இந்து மதத்துக்கும் ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் செய்கின்ற துரோகமாகவே பார்க முடியும். பதவிக்காகவும் பட்டத்திற்காகவும் சலுகை க்காகவும் அமைச்சு பதவிகளை யாருக்கும் வழங்கலாம் என்றால் குறைந்தபட்சம் அந்த துறைசார்ந்த அந்த மதம் சார்ந்த எதினிலும் சம்பந்தமில்லாத ஒரு இஷ்லாம் சமயத்தவரை புனிதமான இந்து சமய பாரம்பரிய துறை சார்ந்த விடயத்துக்கு நியமித்தமை பாரதூரமான அவமானம் எனவும் பா.அரியநேத்திரன் மேலும் கூறினார்,
Share this article :

Post a Comment

 
Copyright © 2018. paduvaanwin . All Rights Reserved.
Design Template by paduvaanwin.com |