தொடர்புகளுக்கு :- paduvaanwinnews@gmail.com
Hot News »
Bagikan kepada teman!

வெளிநாடு சென்றவர்களை இலக்கு வைக்கும் இலங்கை இராணுவம்

Penulis : sankar on Tuesday, July 17, 2018 | July 17, 2018

Tuesday, July 17, 2018

முகாம்களுக்குள் முடங்கிக்கிடந்த இராணுவம் தற்போது அதிக ஈடுபாட்டுடன் தமிழர்களின் அசைவுகளை அவதானித்துக்கொண்டிருக்கின்றது, வெளிநாடுகளில் உள்ள வடக்கு, கிழக்கு தமிழர்களின் பதிவுகளை குறிப்பாக அகதி தஞ்சம்கோரும் தமிழர்களின் பதிவுகளை இலங்கை இராணுவத்தினர் சேகரிக்கின்றனர் என சிரேஸ்ட அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு உலவுத் தகவல்களுக்காகவே வடக்கிழக்கில் போதை வஸ்து பாவனை கட்டுப்படுத்தல் என்ற பெயரில் முப்படையினரையும் அரசாங்கம் களமிறக்குகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீண்டும் தூக்குத்தண்டனை அமுல்படுத்துவது தொடர்பில் பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பில் லங்காசிறியின் அரசியல் களம் வட்டமேசை நிகழ்ச்சிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாளுக்கு நாள் மாற்றமடைந்து வரும் தென்னிலங்கை அரசியல் களம் மற்றும் மீண்டும் அமுல்படுத்தப்படும் தூக்குத்தண்டனையின் எதிர்கால பிரதிபலிப்புக்கள் என்பது தொடர்பிலும் அவர் இதன்போது விளக்கமளித்துள்ளார்.
comments | | Read More...

முதலைக்குடாவில் வீரத்தமிழர் முன்னணியினரால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு!

Penulis : sankar on Friday, June 29, 2018 | June 29, 2018

Friday, June 29, 2018

மட்டக்களப்பு- முதலைக்குடாவில் வீரத்தமிழர் முன்னணியினரால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு (29) இன்று மாலை முதலைக்குடா கண்ணகி அம்மன் ஆலய அரங்கில் இடம்பெற்றது.
தாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு  நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு இரண்டாவது கட்டமாக முப்பது துவிச்சக்கர வண்டிகள் வீரத்தமிழர் முன்னணியினரால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது வீரத்தமிழர் முன்னனின் அங்கத்தவர்கள் மற்றும் சனசமூக முன்னால் தலைவர் கோபாலப்பிள்ளை ஊர் பொது மக்கள் பாடசாலை மாணவிகள் என கலந்துகொண்டனர்.
comments | | Read More...

தாந்தாமலை ஶ்ரீ முருகப்பெருமான் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா!

கிழக்கிலங்கையில் சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தில் பல்நெடுங்காலமாக இயற்கை வளம் செழிக்கும் தாந்தாமலை ஶ்ரீ முருகப்பெருமான் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா எதிர்வரும் 07/07/2018,சனிக்கிழமை திருக்கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 28/07/2018 சனிக்கிழமை காலை தீர்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெறும்.
இதன் படி தொடர்ந்து இருபத்தொரு நாட்கள் இரவு திருவிழாக்கள் அலங்கார சிறப்பு ஆராதனைகளுடன் இடம்பெறவுள்ளது.

அதன்படி 7ம் திகதி இரவு கற்சேனை,தீவுக்குடியிருப்பு,கிரான்குளம் கிராம மக்கள் திருவிழா, 8ம் திகதி ஆரையம்பதி தொடக்கம் மட்டக்கள்பு மக்கள் திருவிழா, 9ம் திகதி மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக நலன்புரி சங்கத்தின் திருவிழா.10ம் திகதி பட்டிப்பளை கிராம மக்கள் திருவிழா. 11ம் திகதி கடுக்காமுனை கிராம மக்கள் திருவிழா, 12ம் திகதி மகிழூர்,மகிழூர்முனை,கண்ணகிபுரம் மக்கள்திருவிழா,13ம் திகதி புதுமண்டபத்தடி, கரையாக்கன்தீவு,நடராசானந்தபுரம்,பாவற்கொடிச்சேனை மக்கள் திருவிழா,14ம் திகதி தாந்தாமலை,கச்சக்கொடிசுவாமிமலை,பன்சேனை,சில்லிக்கொடியாறு மக்கள் திருவிழா, 15ம் திகதி இலுப்படிச்சேனை,கொத்தியாபுலை மக்கள். திருவிழா,16ம் திகதி புதுக்குடியிருப்பு கிராம மக்கள் திருவிழா,17ம் திகதி அம்பிளாந்துறை கிராம மக்கள் திருவிழா,18ம் திகதி குருக்கள்மடம்,செட்டிபாளையம்,தேற்றாத்தீவு,மாங்காடு,கழுதாவளை,களுவாஞ்சிகுடி மக்கள் திருவிழா,19,ம் திகதி நாற்பதுவட்டை மக்கள் திருவிழா,20ம் திகதி பனிச்சையடிமுன்மாரி,மாவடிமுன்மாரி,திக்கோடை,39ம்,49ம் கிராம மக்கள் திருவிழா, 21ம் திகதி எருவில் கிராமமக்கள் திருவிழா,22ம் திகதி மகிழடித்தீவு, தாழங்குடா,படையாண்டவெளி,பண்டாரியாவெளி மக்கள் திருவிழா,23ம் திகதி அரசடித்தீவு கிராம மக்கள் திருவிழா, 24ம் திகதி முதலைக்குடா கிராம மக்கள் திருவிழா, 25ம்திகதி கன்னன்குடா,மண்டபத்தடி,குறிஞ்சாமுனை,காயன்காடு,புளியடிமடு,பரித்திச்சேனை மக்களின் திருவிழா,26ம் திகதி கொக்கட்டிச்சோலை கிராம மக்கள் திருவிழா,27ம் திகதி முனைக்காடு கிராம மக்கள் திருவிழா. 28ம் திகதி அதிகாலை தீர்த்தோற்சவம் இடம்பெறும்.

comments | | Read More...

கரவெட்டி ஆதவன் விளையாட்டுக் கழகத்தினால் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி!

Penulis : sankar on Thursday, June 28, 2018 | June 28, 2018

Thursday, June 28, 2018


மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட கரவெட்டி ஆதவன் விளையாட்டுக் கழகம் தனது 40வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கரவெட்டி  கிராம மக்களின் அனுசரணையுடன் மாபெரும்  உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியினை 26ம் ,27ம் திகதிகளில் நடாத்தி இருந்தார்கள்  இந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இரவு, பகல் போட்டியாக நடைபெற்றது.

கிழக்கு மாகாண மூன்று மாவட்டத்தில் இருந்தும் அணிகள் வருகை தந்திருந்தனர்.
இந்த அணிகளில் இருந்து இறுதிப் போட்டிக்கு மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் சிறந்த அணிகளான முதலைக்குடா விநாயகர் அணியும் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியும் தெரிவாகியது.

இந்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வு ஆதவன் விளையாட்டுக் கழக தலைவர் பா.காங்கேஸ்ராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்த இறுதி நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களும்,  சிறப்பு அதிதியாக மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா அவர்களும், கௌரவ அதிதிகளாக மண்முனை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் அ.முத்துலிங்கம் ,
மட்டக்களப்பு மானகர சபை உறுப்பினர் திலிப்குமார்,
நாவற்காடு நாமகள் வித்தியாலய அதிபர் த.கோபாலப்பிள்ளை ஆகியோரும்.
அழைப்பு அதிதிகளாக கரவெட்டி சமுகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள்.
ஆகிய அதிதிகள் வருகை தந்திருந்தனர்.

இந்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் எதிர்த்தாடியிருந்த இரு கழகங்களும் எந்த கோள்களும் போடாததால் போட்டியின் வெற்றிவை தீர்மானிர்ப்பதற்காக தண்டனை உதை இடம்பெற்றது இதில் முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று இந்த ஆண்டிற்கான மகுடத்தினை சூடிக்கொன்டது.
இந்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் 2ஆம் இடத்தினை கொக்கட்டிச்சோலை "ஈஸ்வரா" விளையாட்டுக் கழகமும்,
3ஆம் இடத்தினை காஞ்சிரங்குடா "ஜெகன்" விளையாட்டுக் கழகமும் ,
4ஆம் இடத்தினை கரவெட்டி "ஆதவன்" விளையாட்டுக் கழகமும் பெற்றுக்கொன்டது.
இறுதிப் போட்டியின் சிறந்த வீரர், சிறந்த பந்துக் காப்பாளராக கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா வீரர்களும்.
தொடரின் சிறந்த வீரராக முதலைக்குடா விநாயகர் விரர் ரதன் அவர்களும், சிறந்த பின்கள வீரராக முதலைக்குடா விநாயகர் வீரர் வொபி அவர்களும் தொரிவு செய்யப்பட்டனர்.

வெற்றிபெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணம் மற்றும் பணப்பரிசும் முதலாம், இரண்டாம் இடங்களை பெற்ற கழகங்களுக்கு பதங்கம் ஆகியன வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு முதலாம் இடந்தினை பெற்ற முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கு சவால் கிண்ணமும் வழங்கப்பட்டுது குறிப்பிடத்தக்கது.
comments | | Read More...

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மகிழ்ச்சியான செய்தி!

Penulis : sankar on Wednesday, June 27, 2018 | June 27, 2018

Wednesday, June 27, 2018

இந்த வருடம் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் வினாக்களுக்கு விடையளிப்பதற்கு முன், அதனை வாசித்து தெளிவுபெறுவதற்காக 10 நிமிடங்கள் மேலதிகமாக வழங்கப்படவுள்ளது.
2018ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன், ஆகஸ்டில் ஆரம்பமாகும் பரீட்சைகளானது எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.
க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள்களுக்கு 3 மணித்தியால நேரம் வழங்கப்படும். இந்த நிலையிலேயே, இம்முறை மேலதிகமாக 10 நிமிடங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
comments | | Read More...

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை! மாவை

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஒதுங்கிக்கொண்டதாக இணையதளங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என்று மாவை சேனாதிராஜாவிற்கு நெருக்கமான வட்டாரங்களிடம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தம்மிடம் நேரடியாகத் தெரிவித்ததாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வடக்கு மாகாண சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யார் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போதைய முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இடம் வழங்கப்படமாட்டாது என்று அந்தக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்புகோரினால் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கத் தயார் என்றும், கடந்த தடவை முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் விட்டுக்கொடுத்து தவறிழைத்ததைப் போன்று இம்முறை தவறிழைக்க மாட்டேன் என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு நிலையில், சில இணையதளங்களில் இவ்விவகாரம் தொடர்பில் செய்திகள் வெளியாகியிருந்தன.
அதில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளரிலிருந்து ஒதுங்குவது கட்சிக்கு நல்லதெனில் என்னை நினைத்து சங்கடப்படத் தேவையில்லை.
நான் ஒதுங்கிக்கொள்கிறேன் என்ற முடிவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தச் செய்தி தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் வீட்டுக்கு நேரில் சென்று நாடாளுமன்ற உறுப்பினருக்கு நெருக்கமான ஒருவர் கேட்டுள்ளார்.
அந்தச் செய்தியை அவர் முற்றாக மறுத்துள்ளார். அப்படி ஒன்றும் கூறவேயில்லை என்று குறிப்பிட்டுள்ளார் என அறியமுடிகின்றது.
comments | | Read More...

படுவான்கரையின் மேலும் பல கிராமங்களுக்கு, குடிநீர் வழங்கப்படுவதற்கு நிதி ஏற்பாடு!

படுவான்கரையின் மேலும் பல கிராமங்களுக்கு, குடிநீர் வழங்கப்படுவதற்கு நிதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
ஆயித்தியமலை ஸ்ரீ முத்து மாரியம்மன் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவமும் ஆலயத்தின் வைர விழா நிகழ்வும் நேற்று ஆலய வளாகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வின் போது ஆலயத்தின் வரலாறு கூறும் “தல விருட்சம்” எனும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாக, தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பது சம்பந்தமாகவும், நாடாளுமன்ற அமர்வுகளுக்கு சென்று அபிவிருத்தி தொடர்பாக பேசுவது மட்டுமல்லாது பல அமைச்சுகளுக்கும் சென்று மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கொண்டு வரக்கூடிய அபிவிருத்தி திட்டங்கள், வேலை வாய்ப்புக்கள் மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அமைச்சு உத்தியோகத்தர்களை சந்தித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

உன்னிச்சை குளத்து நீரைஇஉன்னிச்சை மற்றும் உன்னிச்சையை அண்டிய கிராமங்களுக்கும் வழங்காமை குறித்து பல தடவைகள் நாடாளுமன்றிலும், அமைச்சுகளிலும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்கிணங்க நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகளோடு அடிக்கடி தொடர்பு கொண்டும் அவர்களை குறித்த கிராமங்களுக்கு அழைத்துச் சென்று கிராமங்களின் அவல நிலைகளை பார்வையிட வைத்ததன் மூலமும், தற்போது உன்னிச்சை, நெடியமாடு, ஆயித்தியமலை,மணிபுரம், கரடியனாறு போன்ற கிராமங்களுக்கு குடிநீர் வழங்க 700 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து மிக விரைவில் வேலைகள் ஆரம்பமாகும்.
இன்னும் குடிநீர் வழங்கப் படாமல் இருக்கும் பதுளை வீதியின் கிராமங்களுக்கும் காஞ்சிரங்குடா, பாவக்கொடிச்சேனை மற்றும் பட்டிப்பளை பிரிவின் கிராமங்களுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
comments | | Read More...

அன்று சம்பந்தனை புகழ் பாடிய வெள்ளிமலை இன்று நாளை யார் தெரியுமா?

பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் உட்பட இளைஞர்கள் விடுவிக்கப்படவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் உபதலைவருமான ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.

மட்டக்களப்பில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் ஏற்பாடுசெய்திருந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் நேற்று காலை முதல் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடைபெற்றுவந்தது.

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் விடுதலையினை வலியுறுயுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
 இறுதியாக உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் நேற்று மாலை மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் உபதலைவருமான ஞா.கிருஸ்ணபிள்ளை போன்றோர் சந்தித்தனர்.

இதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிருஸ்ணபிள்ளை, பௌத்த மதகுவு மேல் நீதிமன்றம் சென்று விடுதலைசெய்யமுடியும் என்றால், கொடூர போராட்டத்தினை செய்த ஜே.வி.பி.க்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலைசெய்யமுடியும் என்றால் தமிழ் மக்களின் பிரதிநிதியாகவும் கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்ந்தவராகவும் உள்ள முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனை ஏன் விடுதலைசெய்யமுடியாது என்பதை இந்த அரசாங்கத்திடம் கேட்கவிரும்புகின்றேன்.
comments | | Read More...

ஆயித்தியமலை ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் "தலவிருட்சம்" நூல் வெளியீட்டு விழா!

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட ஆயித்தியமலை ஸ்ரீ முத்து மாரியம்மன் ஸ்ரீ கதிரவேலாயுத சுவாமி ஆலய பரிபாலன சபையினரால் "தலவிருட்சம்" நூல் 25.06.2018 திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு வெளியீட்டு நிகழ்வு ஆலய பரிபாலன சபைத் தலைவர் இ.விநாயகமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

இந்த நூல் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் கடந்ததினை நினைவூட்டும் வகையில் வைரவிழா நூலாக வெளியீடப்பட்டது. இந்த "தலவிருட்சம்" நூல் வெளியீட்டு நிகழ்விற்கு முதன்மை அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன் மற்றும் ச.வியாழேந்திரன் ஆகியோரும்.

சிறப்பு அதிதிகளாக மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா , மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் ஆகியோரும். கௌரவ அதிதிகளாக மண்முனை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான தைரியராசா ஜெயந்தினி, நாகராசா பத்மராகினி . கிராம உத்தியோகத்தர் ப.சிவநாதன் ஆகியோரும். அழைப்பு அதிதிகளாக ஆயித்தியமலை கிராமத்திற்கு அண்மையில் இருக்கின்ற ஆலயங்களின் நிருபாக சபையினரும் இந்த நிகழ்விற்கு அதிதிகளாக வருகை தந்திருந்தனர்.
comments | | Read More...

வாழைச்சேனையில் பிள்ளையான் குழுவினரின் உழல் அம்பலம்!

Penulis : sankar on Tuesday, June 26, 2018 | June 26, 2018

Tuesday, June 26, 2018

வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் தனது கட்சி சார்ந்தவர்களுக்கு மாத்திரம் உதவிகளை வழங்கி வருகின்றார் என வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கனகரெத்தினம் கமலநேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளரின் நடவடிக்கைகள் தொடர்பாக இன்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளரிடம் என்னால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு மகஜர்கள் கூட வழங்கப்பட்டன. ஆனால் இவ்விடயம் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
தற்போது சபை உறுப்பினர்களின் சிபாரிசின் அடிப்படையில் வீதிகளுக்கு மின் விளக்குகள் பொறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் தவிசாளர் தனது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்ந்த உறுப்பினர்களுக்கு மாத்திரம் உதவி வழங்கி வருகின்றார்.
எமது கட்சியின் சில உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சியின் சில உறுப்பினர்கள் இணைந்து வீதிகளுக்கு மின் விளக்குகள் பொறுத்துவதற்கு கடிதம் வழங்கியிருந்தனர், ஆனால் இது தொடர்பில் தவிசாளர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தங்கள் கட்சி சார்ந்தவர்களின் பகுதிக்கு மாத்திரம் சேவை செய்து வருகின்றார்.
பதவி ஏற்றதும் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒற்றுமையாக சேவையை செய்வதாக கூறிய தவிசாளர் தற்போது தனது கட்சி சார்ந்து செயற்படுவது வேதனை அளிக்கின்றது. ஒரு தவிசாளர் தனது கட்சி சார்ந்து சேவை செய்வதும், அத்தோடு கட்சி ரீதியாக சபையை செயற்படுத்துவதும் உண்மையில் கண்டிக்கப்பட வேண்டிய விடயமாக உள்ளது.
வாழைச்சேனை பிரதேச சபையை ஒரு முன்னுதாரணமாக நல்ல முறையில் கொண்டு செல்ல வேண்டிய தவிசாளர் அதனை கட்சி வழி நடத்தலின் கீழ் கொண்டு செல்கின்றார்.
சபை அமர்வில் ஏதும் பிரேரணை கொண்டு வந்தாலோ அல்லது தேவைகளை நடைமுறைப்படுத்துவதாக இருந்தாலோ கட்சி தலைமை சொல்வதை கேட்டே செயற்படுகின்றார்.
இவ்வாறு கட்சி சார்ந்து செயற்படுவது வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட மக்களை ஏமாற்றும் செயலாகவே கருதப்படுகின்றது. ஆகவே வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் கட்சி சார்ந்து செயற்படாது மக்கள் நலன் சார்ந்து ஏனைய சபை உறுப்பினர்களால் கொண்டுவரப்படும் தேவைகளை நிறைவேற்றும் முகமாக செயற்பட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
அத்தோடு தவிசாளர் சபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகள் சீரின்மை காரணமாக ஒரு நபர் வீதியில் இறங்கி போராட்டம் நடாத்தி வருகின்றார். இந்த நிலைமை இன்னும் தொடராமல் இருப்பதற்கு வீதிகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையடி சபைக்குட்பட்ட வீதிகளை புனரமைப்பு செய்வதற்கு நிதி ஒதுக்கீடுகளை பெற்றுக் கொள்வதற்கும் நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
comments | | Read More...

ரூபாவின் பெறுமதியில் தற்போது சற்று அதிகரிப்பு!

டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் தற்போது சற்று அதிகரிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது.

கடந்த வாரம் வரை டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 161 ரூபாவையும் தாண்டி வீழ்ச்சியடைந்து சென்று கொண்டிருந்தது.

அந்நியச் செலாவணி குறைவு மற்றும் அந்நிய முதலீடுகள் வீழ்ச்சி என்பனவும் இதற்கான காரணங்களாக கூறப்பட்டது.

இதன் காரணமாக எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்திருந்ததுடன் இறக்குமதிப் பொருட்களின் விலையும் அதிகரிக்க நேர்ந்திருந்தது.

இந்நிலையில் தற்போது டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 160 ரூபாவரை முன்னேற்றம் கண்டுள்ளது.
comments | | Read More...

காந்தி பூங்கா முன்பாக போராட்டத்தில் குதித்த பிள்ளையான் குழுவினர்!

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்ககோரியும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சுயமாக ஜனநாயக பாதையில் ஈடுபட வழிவிடுமாறு கோரியும் மட்டக்களப்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.


மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் என்னும் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த உண்ணாவிர போராட்டம் நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக வெள்ளையாடை அணிந்து வாயில் கறுப்பு துணிகளினால் கட்டியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


கடந்த மூன்று வருடங்களாக சரியான விசாரணைகள் இன்றி அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி அவர் விடுக்கப்பட்டு கிழக்கு மாகாணத்திற்கான நல்ல அரசியல் தலைமையினை உருவாக்க நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இங்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இது ஆரம்பக்கட்ட போராட்டம் எனவும் இந்த போராட்டம் தொடர்ச்சியாக வேறு வகையில் முன்னெடுக்கப்படும் எனவும் இங்கு கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
comments | | Read More...

படுவான் சமர் உதைபந்தாட்டப் போட்டியில் விக்னேஸ்வரா விளையாட்டுக்கழகம் முதலிடம்!

Penulis : sankar on Monday, June 25, 2018 | June 25, 2018

Monday, June 25, 2018

கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகம் நடாத்திய 9வது படுவான் சமர் உதைபந்தாட்டப் போட்டியில் அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக்கழகம் முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டது.
கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானத்தில் சனி, ஞாயிறு தினங்களில் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் 34கழகங்கள் பங்குபற்றி, இறுதிப்போட்டிக்கு அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக்கழகமும், கணேசபுரம் கண்ணகி விளையாட்டுக்கழகமும் தெரிவாகினர். வழங்கப்பட்ட நேரத்திற்குள் இரு அணிகளும் எவ்வித கோள்களும் இடாது, போட்டி சமநிலையில் நிறைவு பெற்றது. வெற்றி, தோல்வியை தெரிவு செய்வதற்காக பெனாட்டிக் வழங்கப்பட்ட நிலையில், அரசடித்தீவு விக்னேஸ்வரா அணி 1: 0 என்ற ரீதியில் முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டது.
போட்டியில் இரண்டாம் இடத்தினை கணேசபுரம் கண்ணகி விளையாட்டுக்கழகமும், மூன்றாம் இடத்தினை கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகமும் வெற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய கழகங்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும், பணப்பரிசிலும், பதக்கமும் அணிவிக்கப்பட்டது. மேலும் சிறந்த நன்னடத்தை அணி, அதிக கோள்களை செலுத்தியவர், சிறந்த விளையாட்டு வீரர் ஆகியோருக்கு நினைவுக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இறுதி நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ், மண்முனை தென்மேற்கு தவிசாளர் சீ.புஸ்பலிங்கம், பாடசாலையின் அதிபர் கோ.சண்முகநாதன் மற்றும் கிராமசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


comments | | Read More...

கொலை செய்யப்பட்ட நிலையில் கிணற்றில் இருந்து சிறுமயின் சடலம் மீட்பு!

யாழ். சுழிபுரம் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில், கிணற்றில் இருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சுழிபுரம் - காட்டுபுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் குறித்து யாழ். வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
comments | | Read More...

விளாவட்டவான் கிராமத்தில் வீதிநாடகம்!

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட விளாவட்டவான் கிராமத்தில். Emotional Intellignce அனுசரனையில் Kathiravan Social Development Organization வழங்கும் "கதிரவனின் விழிப்புணர்வு வீதிநாடகம்"சுற்றுலாத்துறை அபிவிருத்தி வேலைவாய்ப்பு தொடர்பான வீதிநாடகமாக இடம்பெற்றது.

இந்ந வீதிநாடகத்தில் சமுகத்தில் இடம்பெறும் பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த வீதிநாடகம் இடம்பெற்ற இடத்திற்கு மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா அவர்களும் வருகை தந்து சிறிய உரையினை ஆற்றியிருந்தார்.


comments | | Read More...

மட்டக்களப்பு வாவியின் முகத்துவாரத்தினை திறக்க முயற்சி! ஞா.ஸ்ரீநேசன் M.P

(மயூ.ஆமலை)

மட்டக்களப்பு வாவியின் நீர் மட்டம் , வரத்து நீர் காரணமாக உயர்த்துள்ளமையினால் அறுவடைக்கு தயாராகவுள்ள நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன.வாவியின் நீர்மட்டத்தை குறைப்பதற்காக வாவி நீர் கடலோடு சங்கமிக்கும் முகத்துவாரத்தை வெட்டி திறந்தது விடுமாறு விவசாயிகள் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் கடந்த வாரம் உரிய அதிகாரிகளுடன் முகத்துவார பகுதியினை பார்வையிட்டார்.
எனினும் கடலின் நீர் மட்டத்தோடு ஒப்பிடுகையில் வாவியின் நீர் மட்டம் போதியளவு உயர்ந்து காணப்பாடமையினால் முகத்துவாரத்தினை வெட்டுவது சாத்தியப்படவில்லை. தொடர்ச்சியாக உயர்ந்துவரும் வாவியின் நீர் மட்டத்தினால்’ நெல் வயல்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக மீண்டும் விவசாயிகள் முறையிட்டமையினால் ,பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மற்றும் மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் ஆகியோர் விவசாய பிரதிநிதிகளுடன் இன்று காலை குறித்த முகத்துவார பகுதியிற்கு சென்று நிலைமையினை ஆராய்ந்தனர்.


 இதன் போது மீனவர் சங்க பிரதிநிதிகள் , பிரதேச மீனவர்கள் என்போரும் தமது கருத்துகளை தெரிவித்தனர். விவசாயிகளின் இக்கட்டான நிலைமையினை கருத்தில் கொண்டு நாளை நடைபெற இருக்கும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுடனும் கலந்துரையாடி முகத்துவாரத்தினை வெட்டி வாவியின் நீர் மட்டத்தினை குறைக்க நடவடிக்கை எடுப்பதென தீர்மானிக்கப் பட்டது.

comments | | Read More...

மட்டு நகரில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பு அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு நகரில் இன்று(25) காலை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு தழுவிய ரீதியிலும், தலைநகர் கொழும்பிலும் இடம்பெற்று வரும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவே தாம் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் சகல அஞ்சல்துறை பணியாளர்களையும், மட்டக்களப்பு பிரதான அஞ்சலகத்தின் முன்னால் நாளை காலை 8.45 மணிக்கு வருகை தந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இதேவேளை, அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த தபால் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் தொடர் வேலை நிறுத்தத்தால் கடந்த 12ம் திகதியிலிருந்து நாட்டின் சகல அஞ்சல் சேவைகளும் ஸ்தம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
comments | | Read More...

சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு -ஜெம்பட்டா வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
comments | | Read More...

புல்லுமலை குடிநீர் தொழிற்சாலை தொடர்பாக ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையில் நடந்த வாக்குவாதங்கள்!

மட்டக்களப்பு பெரிய புல்லுமலை போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலைக்கான கட்டடத்திற்கு ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை அனுமதி வழங்கப்பட்ட போதிலும் பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாகவும் அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மாணம் காரணமாகவும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தினால் இத்திட்டத்தினை இடை நிறுத்துமாறு
கேட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதற்கு சபையின் விஷேட அமர்வில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் தொடர்பாக வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு போது 12 பேர் ஆதரவு தெரிவித்ததுடன் ஏனைய 8 நடுநிலை வகித்தனர். இதன் அடிப்படையில ஜனாதிபதியின் பதிலுக்காக கடிதம் அனுப்புவதாக ;தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச சபையின் விஷேட அமர்வு இன்று வியாழக்கிழமை (21) தவிசாளர் நாகமணி கதிரவேல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெரிய புல்லுமலை கிரமத்தில் போத்தலில் அடைக்கப்படும் குடிநீர் தொழிற்சாலை தொடர்பாக உறுப்பினர் மத்தியில் கருத்துக்கள் பெறப்பட்டன. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கட்சியின் உறுப்பினர் வி.ஜெயகணேஸ் – செங்கலடி பதுளைவீதியில் 8000 மேற்பட்ட மூவின மக்களும் வசிக்கின்றனர் இவர்கள் தொழிலாக கால்நடை வளர்ப்பு விவசாயம் மீன்பிடி போன்ற தொழில்களை ; ஜீவனோபாயமாக கொண்டுள்ளார்கள். அந்தப்பிரதேசத்தில் ஒரு குளத்தை அடைத்து நிலத்திற்கு கிழாக 180 மீற்றர் தூரத்திற்கு கீழாக நீரை எடுப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் அல்ல இந்தப்பிரதேசத்தில் உள்ள மக்களும் கால்நடைகளும் நிலத்தடி நீரை நம்பியே வாழ்கின்றன இந்தப்பிரதேசத்தில் இருந்து நிலத்தடி நீரைப்பெற்று போத்தலில் அடைத்து விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்க முடியாது. ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் எம்.எஸ் முகமது ஜவ்பர் – போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலை தொடர்பாக இந்த ஆண்டின் முற்பகுதியில் கட்டிடம் அமைப்பதற்கான அனுமதியை மாத்திரம் ஏறாவூர் பற்று பிரதேச சபை வளங்கியுள்ளது இதற்கு ஏனைய திணைக்களங்களும் தகுதிச்சான்றிதழ்கள் வழங்கியுள்ளன அனுமதி பெற்று தொழிற்சாலை அமைக்கப்பட்ட பின் அதற்கெதிராக கிளர்ந்தெழுவதும் ஆர்ப்பாட்டங்கள் செய்து தொழிற்சாலையை தடை செய்தால் மில்லியன் கணக்கில் முதலீடு செய்து சட்டப்படி அனுமதி பெற்று தொழிற்சாலை அமைத்தவர்கள் பிரதேசபை செயலாளருக்கு எதிராகவோ சபைக்கு எதிராகவோ வழக்குதொடர்ந்தால் வழக்கிற்கான செலவினை யார் பொறுப்பெடுப்பது செயலாளர் சபை நிதியில் இருந்தா அல்லது தனிப்பட்ட ரீதியிலா வழக்காடுவார். குறிப்பிட்ட கம்பணியுடன் அனுகி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சணைக்கு தீர்வு காணவேண்டும் . இது தொடர்ப்பாக பிரதேசசபையின் செயலாளர் க.பேரின்பராஜா தெரிவிக்கையில் – 2018 ஜனவரி மாதம் கட்டிட அனுமதிக்காக விண்ணப்பம் கிடைக்கப்படட்து இந்தக் கட்டிடத்திற்கான நீர் முகாமைத்துவ அமைச்சின் சான்றிதழ் எங்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசஅதிகாரி என்ற வகையில் கட்டிடம் அமைப்பதற்கான அனைத்து ஆவணங்களும்; சரியாக இருக்கும் பட்சத்தில் அனுமதி வழங்க வேண்டும் சட்டத்திற்கு கட்டப்பட்டடுத்தான் அனுமதி வழங்கியுள்ளேன் அமைச்சர் ஹிஸ்புல்லா கூறிய அனுமதி வழங்கினீர்கள் தொலைபேசியில் அழைத்து கேட்டார்கள் நான் எவருடைய கதையையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை ஆவணங்கள் சரியாக இருந்தால் கட்டிடத்திற்கான அனுமதி வழங்கமுடியும் யார் வரவேண்டும் என்னை சந்திக்கவேண்டும் என்பதை நான் பார்க்கவில்லை என்றார். தவிசாளர், சுயமாக இயங்காமல் உபதவிசாளர் மற்றும் செயலாளரின் கருத்துக்களுக்கு அமைய செயற்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சி.சர்வானந்தம் குற்றம் சுமத்தினார் இதன்போது குறுக்கிட்ட தமிழ்மக்கள் விடதலைப்புலிகளின் கட்சி உறுப்பினர் நா.திருநாவுக்கரசு – தமிழ்தேசிய கூட்டமைப்புதான் தவிசாளர் தெரிவின்போது ந.கதிரவேலுக்கு ஆதரவு வழங்கியது தற்போது அவர் தகுதி அற்றவர் என விமர்சிக்கின்றார்கள் நீங்கள் ஆளும் கட்சி என்ற ரீதியில் பணத்தை பிரித்து நீங்களே எங்கள் வட்டாரங்களிலும் வேiலை செய்யுங்கள் என்றார்


comments | | Read More...

மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் பன்சேனை மற்றும் அம்பிளாந்துறை பாடசாலை வெற்றி!

Penulis : sankar on Saturday, June 23, 2018 | June 23, 2018

Saturday, June 23, 2018

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நேற்றைய தினம் (22)
விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்பட்ட மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான காற்பந்தாட்டப் போட்டி மட்டக்களப்பு மாவட்ட அணியினர் 2018 ம் ஆண்டுக்கான champions ஆக தெரிவாகினர்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்தி மட்/ மமே/பன்சேனை பாரி வித்தியாலய வீரர்களும் மட்/மமே/அம்பிளாந்துறை மகா வித்தியாலய வீரர்களும் சேர்ந்து இப் போட்டியில் பங்கு பற்றினர்.

இறுதிப் போட்டியானது மட்டக்களப்பு அணியினருக்கும் அம்பாறை அணியினருக்கும் இடையே நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு அணியினர் 3:0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றனர்.

இதில் பா.வசந்தினி 02 கோல்களையும் கோடீஸ்வரி ஒரு கோலினையும் உட்புகுத்தி வெற்றியை உறுதி செய்தனர்.

comments | | Read More...
 
Copyright © 2018. paduvaanwin . All Rights Reserved.
Design Template by paduvaanwin.com |